Sunday, October 25, 2015

பெண்கள் ஆடை பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது...?

முகநூல்:
தோழி சுலேகா
 
பெண்கள் ஆடை பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது...
சிறு பிள்ளைகளை கூட பாலியல் செய்யும் நாடு தானே இது. சிறுவர்களை வைத்து பாலியல் தொழில் செய்வதில் முதலிடம் தானே இதற்கு.. இங்க இருக்கிற ஆணாதிக்க நாய்கள் எல்லாம் சொல்வார்கள்..
இங்கு ஒன்று நினைவு படுத்த விரும்புகிரேன்..
50வருடகளுக்கு முன் எந்த தலித் பெண்கள் இங்கு தோல் சீலை அணிவதில்லை
கேரளாவில் 15வருடங்களுக்கு முன்பு வரை அங்கு வாழும் ஒரு பிரிவு பெண்களுக்கு தோல் சீலை அனுமதி கிடையாது, வேறு அரைநிருவாணமாக தான் இருப்பார்கள் அது உனக்கு நாகரீக உடையா?
40 வருடத்திற்கு முன்பு வரை இங்கு எந்த பெண்களும் சாக்கெட் (பெண்கள் மேல் சட்டை) அணியவில்லை அது உனக்கு தெரியவில்லை என்றால் உன் பாட்டியிடம் கேள்.. அது உனக்கு நாகரீக ஆடையா ?
25வருடத்திற்கு முன்பு பெண்கள் பிரா எனும் உள்ளாடை அணிந்தால் இந்த சமூகம் அவளை வேசியாக பார்த்தது ஆதாரம் வேண்டும் என்றால் உங்கள் அம்மாவிடம் கேள்...
சேலை சவுகரியம் இல்லை சுடிதார் jean pant ஆடை சேலைகளை விட சிறந்ததாக உள்ளது.. தர்ப்போது லெகின்ஸ் அணிகிரார்கள்...
லெகின்ஸ் அணைத்து தரப்பு பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது.
'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம்.
லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை தூக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள்.
பெண்களை ஒரு பொருளாக தானே இந்த ஆணாதிக்க முதலாளித்துவ மீடியா காட்டுகிரது.. உங்கள் புராணங்களில் கூட பெண்கள் பனையை பொருள் தானே..
அதை உள்வாங்கிக்கொண்ட உன் எண்ணம் பெண்கள் என்ன ஆடை போட்டாலும் அப்படிதான் பார்க்கும்..
- தோழி. சுலேகா

No comments: