Sunday, October 25, 2015

தாலி கட்டாம வெளில போனா

mukawUl:
Varshini Mehta Devaki
 ·
குடும்பப் பெண் , குங்குமம் வைக்கலைனா, தாலி கட்டாம வெளில போனா கேடுகெட்டவ, விபச்சாரி! - சமுகம்
அப்ப ஆண்களுக்கும் அதே தானே?

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது உலக அறிவும் தேவை...
- தோழி.அருந்ததிராய்

கௌரவப்பசி

முகநூல்:
தோழி சுலேகா 
·
காசு பணத்துக்கு மட்டுமல்ல
கௌரவத்திற்கு நட்டம் என்றும்
கள்ளிப்பால் ஊற்றி
நடக்கின்றன கொலைகள்.
சொந்த சமூகத்தின் கௌரவப்பசிக்கு
தோள்சுமந்த பிள்ளையை
அறுத்துப் போடும் கசாப்புக்காரனுக்குப் பெயர்
‘மானஸ்தன்’.
‘காலில்’ விழுவதை
கௌரவமாய் ஏற்கும் சாதி
‘காதலில்’ விழுவதை
சமூகக் குற்றமாக்கி
உறவையே கொளுத்துவதற்குப் பெயர்
‘வீரம்’.
“தேசத்தின் கௌரவம்” காக்க
காதலர் தினத்து இளைஞர்களை
கைப்பிதுங்க
தாலியோடு துரத்தும்
காவிப்புழுக்கள்
கௌரவக் கொலையாளிகளின்
மீசைக் குகைக்குள்
பதுங்கிக் கொள்கின்றன.
சேரியை எரிக்கவும்
காதலைப் பிரிக்கவும்
செயல் ஊக்கத்தையே
சாதிக்கணக்கெடுப்புகள்
கூடுதலாய்த் தந்துள்ளன.
பள்ளிப் பதிவேட்டிலிருந்து
சாதியை நீக்கினால்
ஒழியுமா இந்தக்கொலைகள் ?
பிறப்பிலும் இறப்பிலும்
பேசும் மொழியிலும்
சாதியை தீண்டாமையை
நஞ்சாய்க்கலந்திட்ட பார்ப்பனியத்தை
சரித்திரத்திலிந்தே நீக்கவேண்டும்
சட்டம் செய்து அல்ல
யுத்தம் செய்து!...

பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே

முகநூல்:
 தோழி சுலேகா 
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத தந்திரக்கார சமூகமிது.
பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.
ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.
ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..
’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி. . .
ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும் ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…
இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…
ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.
மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?
என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!
’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப் பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல..

வரலாறு படைத்த பெண்குலத்தை வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

 முகநூல்:
தோழி சுலேகா ·
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?
இந்துமதம் என்பதைவிட – இத கெட்ட வார்த்தையில் கூறினால் கூட மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.
’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.
’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!
கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..
பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.
’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’

ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?
ஆணே ஒரு அடிமை ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி விடுதலை தர முடியும்?
ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் விடுதலை உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!
போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன் தந்தையாய், கணவனாய், தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!
இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம் இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே...
போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம் பொம்பளை வரமாட்டாங்க என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!
உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!..

" பெண் விடுதலையே சமூக விடுதலை "

மதங்கள், மூடநம்பிக்கைகள், சனாதனக் கோட்பாடுகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக பெண்களைப் பற்றி ஆண்கள் உருவாக்கிய போலியான கட்டுக்கதைகளின் முறைகள் வழக்கத்தில் உள்ள வரை இங்கு எந்த விடுதலைக்கும் சாத்தியமில்லை...
" பெண் விடுதலையே சமூக விடுதலை "

பெண்களின் கற்பு

பெண்களை அடிமை படுத்துவது பெண்களின் கற்பு என்ற ஓர் மாயயை வைத்துதான் பெண்கள் ஆணாதிக்கதிலிருந்து மீள கர்ப்ப பையை அகற்றி விடுங்கள் என்று சொன்ன என் ஆசான் அவர்கள் இருந்த காலத்தில் நான் இல்லாமல் போனது எனக்கு வருத்தமே...

பெண்களைச் சிறுமைப்படுத்தும் இந்து மதம்

 முகநூல்:
தோழி சுலேகா 
வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.
இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை"33 என்று தனது வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.
மேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."33 என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான்.
தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்.
இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். ''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."33 இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்.
சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல், முறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்.
சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர். சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான்.
இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி.
இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான்.
பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.

ஆணாதிக்க இராமனின் யோக்கியதை

முகநூல்:
தோழி சுலேகா 
ஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்.
12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள்.
அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்.
கடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது.


பெண்கள் மீதான கற்பழிப்புகளை இறைக் கட்டளையாகக் கூறி


தோழி சுலேகா 
பெண்கள் மீதான கற்பழிப்புகளை இறைக் கட்டளையாகக் கூறி.....


வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.
அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறைக் கட்டளையாகக் கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று, இராமனின் பெயரால் தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது.
இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு

பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

முகநூல்:
தோழி சுலேகா 
பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம்.
யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்தபோது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும்.
இந்தப் பரிமளகத்தி முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்.
இதற்குப் பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக் கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான்.
இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான். இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப் பெற்று எடுத்தாள்.
வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.
பாண்டுவும் இரண்டு பெண்டாட்டிகளாகக் குந்தி, மாதிரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள்.
நம்பித் தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது அம்பு செலுத்தினான்.
அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம்.
இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?
பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

என்ன உடை அணிய வேண்டும் என்பது பெண்களுக்கு தெரியும்..

என்ன உடை அணிய வேண்டும் என்பது பெண்களுக்கு தெரியும்..
நீ முதலில் உன் வக்கிர பார்வையை நிறுத்து..
பிஞ்சு குழந்தைகளை வல்லுரவு கொள்ளும் உங்கள் சமூக அமைப்பை மாற்று...

பெண்

கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்ககளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும்.

முகநூல்:
தோழி சுலேகா
 
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்ககளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும்.
கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார்.
இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன்.
அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன்.
பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன்.
இந்தப் பாலியல் கூத்துகளை இராசலீலை என இந்துமதம் போற்றுகின்றது.
இந்தக் வக்கி
ர கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.


பெண்கள் ஆடை பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது...?

முகநூல்:
தோழி சுலேகா
 
பெண்கள் ஆடை பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது...
சிறு பிள்ளைகளை கூட பாலியல் செய்யும் நாடு தானே இது. சிறுவர்களை வைத்து பாலியல் தொழில் செய்வதில் முதலிடம் தானே இதற்கு.. இங்க இருக்கிற ஆணாதிக்க நாய்கள் எல்லாம் சொல்வார்கள்..
இங்கு ஒன்று நினைவு படுத்த விரும்புகிரேன்..
50வருடகளுக்கு முன் எந்த தலித் பெண்கள் இங்கு தோல் சீலை அணிவதில்லை
கேரளாவில் 15வருடங்களுக்கு முன்பு வரை அங்கு வாழும் ஒரு பிரிவு பெண்களுக்கு தோல் சீலை அனுமதி கிடையாது, வேறு அரைநிருவாணமாக தான் இருப்பார்கள் அது உனக்கு நாகரீக உடையா?
40 வருடத்திற்கு முன்பு வரை இங்கு எந்த பெண்களும் சாக்கெட் (பெண்கள் மேல் சட்டை) அணியவில்லை அது உனக்கு தெரியவில்லை என்றால் உன் பாட்டியிடம் கேள்.. அது உனக்கு நாகரீக ஆடையா ?
25வருடத்திற்கு முன்பு பெண்கள் பிரா எனும் உள்ளாடை அணிந்தால் இந்த சமூகம் அவளை வேசியாக பார்த்தது ஆதாரம் வேண்டும் என்றால் உங்கள் அம்மாவிடம் கேள்...
சேலை சவுகரியம் இல்லை சுடிதார் jean pant ஆடை சேலைகளை விட சிறந்ததாக உள்ளது.. தர்ப்போது லெகின்ஸ் அணிகிரார்கள்...
லெகின்ஸ் அணைத்து தரப்பு பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது.
'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.
கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம்.
லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை தூக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.
ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள்.
பெண்களை ஒரு பொருளாக தானே இந்த ஆணாதிக்க முதலாளித்துவ மீடியா காட்டுகிரது.. உங்கள் புராணங்களில் கூட பெண்கள் பனையை பொருள் தானே..
அதை உள்வாங்கிக்கொண்ட உன் எண்ணம் பெண்கள் என்ன ஆடை போட்டாலும் அப்படிதான் பார்க்கும்..
- தோழி. சுலேகா

பெண்கள் கோவில் கோவிலாக அலைவதை நினைத்தால் ....

முகநூல்:
தோழி சுலேகா
இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான்.
குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான்.
இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன்.
இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
''புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர்.
பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்." இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.
பெண்கள் என்றால் வேறு காமத்திர்காக பிறக்கபட்டவள் என்றே பார்க்கிறது இந்து மதம். இந்த கேடுகெட்ட மதத்தை நம்பிக்கொண்டு பெண்கள் கோவில் கோவிலாக அலைவதை நினைத்தால் வருத்தம் மட்டும் மிஞ்சிகிரது..
படித்தும் கூட உலக அறிவு இல்லாமல் இருகிரார்களே எனது சகோதரிகள்...
 

எது ஆபாசம் ?

எது ஆபாசம் ? ஆபாசம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? முதலில் உன் கோவிலில் உள்ள சிலை, சிற்பங்களை இடித்து நொறுக்கு அதுதான் ஆபாசமாக உள்ளது...
இயற்கையில் ஒரு சிறு வண்டுற்கு கூட இணை என்பது நன்றாக தெரியும்..
இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் அறிவில்லாமல் நடமாடும் நீ ஒரு பிணத்திர்கு சமம்...

புராணம் இதிகாசமெல்லாம் பெண்களை ’பொரணி’ பேசியபோது


புராணம் இதிகாசமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்ஸ் அவர்களின் கொள்கைகளே
பெண்களை புரட்சி பேச வைத்தது!
வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில் சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.
சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு அறிவியலை கண்டுபிடித்து புது சோஷியலிச உலகையும் படைத்தே காட்டினார்..
குறிப்பு: - (இங்குள்ள மார்க்சிய கம்னியூச கட்சியை நினைவில் எடுத்துக்கொள்ள வேண்டும், அதில் நிறம் மாறிக்கொள்ளும் பச்சோந்திகள் அதிகமாக உள்ளார்கள்)

பெண்களை யாரும் மலரோடு ஒப்பிட வேண்டாம்..

முகநூல்:
தோழி சுலேகா
 பெண்களை யாரும் மலரோடு ஒப்பிட வேண்டாம்..
மனித குலம் விலங்குகளிடமிருந்தே பரிணாமம் பெற்று வந்துள்ளது..
எந்த விலங்கு அதன் சொந்த இனத்தை வேட்டையாடுவதில்லை., பெண்களும் விலங்குகளிலிருந்து தான் பரிணமித்து வந்துள்ளார்கள்..
விலங்குகள் வேட்டையாடுவதில் பெண் விலங்குகளுக்கே தனி சிறப்பு உண்டு.. பயிற்சிகளும் இங்கிருந்தே பெறப்படுகிரது.
அந்த வேட்டையாடும் வெட்டோத்தி குணம் பெண்களை விட்டு இன்னும் போகவில்லை அப்படியே உள்ளது, psychology படித்தவர்களுக்கு நன்கு தெரிய வாய்ப்புண்டு..
எந்த விலங்கு அதன் சொந்த இனத்தை வேட்டையாடுவதில்லை., பெண்களும் அப்படி தான்...
ஏனென்றால் பெண்ணை ஒரு பெண்ணே உருவாக்குகிராள், ஒரு ஆணையும் ஒரு பெண்ணே உருவாக்குகிறாள்...
அவளுக்கு பொறுப்பு உண்டு..
பாசம் உண்டு..
கருணை உண்டு..
உனக்குனு என்ன உண்டு ?
இதை வைத்து பெண்களை முடியாதவள் என்று எண்ணிவிட வேண்டாம். அவளுக்கு வெட்டோத்தி குணம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்..
- தோழி. சுலேகா

பெண்ணியம் என்பது ....

பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது ....

முகநூல்:
தோழி சுலேகா
 காலம் காலமாய் தொடர்ந்து வரும் பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது பெண்ணுடல் மீதான அவளின் உரிமையை அவளுக்கு மீட்டுக் கொடுக்க மறுக்கும் ஆணாதிக்கச் சிந்தனையே..
இந்த ஆதிக்க சிந்தனை எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..
1. ஆடை எப்படி அணிய வேண்டும் என்ற உபதேசம்,
2. எந்த நேரத்தில் மட்டும் பெண் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
3. எந்தெந்த இடத்துக்கு மட்டும் செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
4. யார் கூட வந்தால் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
5. பலாத்காரத்தின் போது அந்த காமுகனை "அண்ணா"- என அழைக்க வேண்டுமென்ற உபதேசம்
இன்னும் எத்தனையெத்தனையோ உபதேசங்களைச் சொல்லி இதனால் மட்டுமே பாலியல் வன்புணர்விலிருந்து பெண் தப்ப முடியும் என்று பயங்கரவாதத்தை சமூகத்தில் பரப்பி தனது ஆதிக்க வெறியை காப்பாற்றிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது
வன்புணர்வு என்பது காமம் அல்ல ரத்தம் வர காயப்படுத்துவது அது வன்முறை மட்டுமே என்று ஆண்கள் அனைவருக்கும் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுங்கள்.
பெண் உடல் மீதான உரிமை பெண்ணிக்கே ஆனது. அவள் அனுமதியில்லாமல் அவள் உடல் மீது அத்துமீறும் உரிமை இவ்வுலகில் எந்த ஆண்களுக்கும் இல்லை என்ற புரிதலைச் சொல்லிக் கொடுங்கள்.
பெண்களுக்கு உடை அணிய சொல்லிக்கொடுக்கும் நீங்கள் ஆண்களுக்கு ஏன் இதை சொல்ல தர தவறுகிரீகள் ?
எத்தனை நாள் கலாசாரம், பண்பாடு என்று பெண்களை அடிமைப்படுத்துவீர்கள்..?
- தோழி. சுலேகா
 

பாலியல் குற்ற வழக்கின் விசாரணை யாவும் ஆணாதிக்க சிந்தனையாகவே

முகநூல்:

தோழி சுலேகா

இந்த நாட்டில் பாலியல் குற்ற வழக்கின் விசாரணை யாவும் ஆணாதிக்க சிந்தனையாகவே இருக்கும்.. இங்கஉள்ள புராணங்களிலும் அப்படியே இருக்கும்.. நுட்ப அறிவுள்ளவர் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்
பாலியல் வழக்குகளில் விசாரணை என்பது இங்கு பாதிக்கப்பட்ட பெண்களை தான் குறை சொல்லும், சோதனை செய்யும். கற்புடையவள்தானா என்ற கேள்வியினை முன் வைத்து இரண்டாம் "கற்பழிப்பினை" நிகழ்த்தும்.
இந்தப் பெண் அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு, அந்த நபருடன் சென்றிருக்கிறாரே....?
அப்படியானால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு எந்த வகையினதாக இருக்கும் என்று அற்புத ஆராய்ச்சியினையைத் தொடங்கும் அந்த ஆணாதிக்கச் சிந்தனை. இதை ஒவ்வொரு பாலியல் குற்ற வழக்குகளிலும் பார்க்கலாம்.
சீதையை ராமன் தீக்குளிக்கச் செய்து "கற்பினை" நிரூபிக்கச் சொன்ன மாதிரி இத்தனை "ராமன்"களுக்கும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் ஏற்கெனவே கற்புடையவள் தான் என்று முதற்கண் நிரூபித்தாகவேண்டும்.
இப்படியொரு கற்புக் கேள்வியை ஆணாதிக்க சிந்தனை எழுப்புவதற்குக் காரணம், ஒருவேளை அவள் "ஒழுக்கக் கேடு"டன் இருப்பாரேயானால் அவள் வன்புணர்வு செய்யப்படுவதில் எந்தத்தவறும் இல்லை என்று இந்த சமூகத்தில் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் கூட நம்பிக்கொண்டிருப்பதை இங்கு காணலாம்.
" ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட அவள் அனுமதி இல்லாமல் அவர் உடல் மீது அத்துமீறும் உரிமை எந்த ஆண்மகனுக்கும் இல்லை"
என்ற எளிய உண்மை விளங்காததால்-அல்லது விளங்கிக் கொள்ள மறுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா? என்று ஆராய்சி செய்கிறார்கள்..
ஆம் எனில் அது எத்தனை சதவீதத்திலான கற்பு என்ற அபத்த ஆராய்ச்சிகளில் இறங்கச் சொல்கிறது.
இங்கு பார்ப்பன அல்லது பொருளாதர வசதி படைத்த வீட்டு பெண்களுக்கு வேண்டுமென்றால் ஒரு 60% நியாயம் கிடைக்குமே ஒழிய இத்தனை ஆண்டு காலமாக கீழ்நிலையில் உள்ள எந்த பெண்ணிற்கு நியாயம் கிடைத்துள்ளது என்று நீங்கள் சொல்லுங்கள்..
இந்த கேள்விகளை பொருந்துக்கொள்ளவும் முடியாமல் இந்த ஆணாதிக்கத்தை எதிர்க்கவும் முடியாமல் எத்தனை தற்கொலைகள் நடந்திருக்கும்? நடத்தப்பட்டிருக்கும்..?
- தோழி. சுலேகா

நீ ஒரு பெண் என்பதால் ......

முகநூல்:
தோழி சுலேகா
என் முகநூலின் வட்டாரத்தில் சிலர் சொல்லுகிரார்கள்..
நீ விளம்பரம் தேடுகிறாய், நீ ஒரு பெண் என்பதால் உனக்கு like comment விழுகிறது என்று..
முகநூலை தவறாக நான் ஒரு போதும் பயன்படுத்தியதில்லை, அந்த அளவுக்கு எனக்கு அறிவில்லாமலும் இல்லை இந்த முகநூல் இல்லை என்றால் என் பேனா மை தீர்ந்து விடாது..
ஒரு பெண் போஸ்ட் போட்டால் ஜொல்லு விடு ஆண்களால் like விழுவது இந்த முகநூலில் சகஜமே..
என்னிடம் இந்த மாதிரியா பேசும் ஆண்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
பெண்கள் போஸ்ட் போட்டால் like விழும் ஆனால் எந்த ஆணும் அந்த பெண்ணின் போஸ்ட்டை share செய்வதில்லை... எனக்கு இங்கு ஒவ்வொரு போஸ்ட்க்கும் சராசரியா 60 பேர் share செய்கிறார்கள்.. பெண்கள விட ஆண்களே அதிகம் share செய்கிறார்கள்..
இங்கு பெண், ஆண் என்று பார்க்கப்படுவது இல்லை அறிவை மட்டும் தான் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..
புரிந்துகொள்ளுபவர்களுக்காக...பெண்ணியம் என்பது எளிதாக பேசிவிட முடியாது.. அதுவும் தராசு போல் பேசுவது என்பது கடினம்..
ஆகவே நான் பெண்விடுதலையை கீழ் நிலை பெண்களின் பார்வையிலிருந்து பேசுகிரேன்..
என் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது சிலர் விமர்சனம் செய்யலாம் ஆனால் உண்மை என்பது என் பதிவில் இருந்துகொண்டே இருக்கும்..

இந்து மதத்தில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரங்கள்...

முகநூல்:
தோழி சுலேகா
இந்து மதத்தில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரங்கள்...
தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்?
மனு இதை இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.
''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"37

அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம் . வக்கிரம் கொப்பளிக்கின்ற போது,
எல்லா கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.
விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன.
அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.
''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"37
அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்.
சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?
''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"37
- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும்.
பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான்.
இவ்வாறு பூசா விதியையும் அதன் அதன் வக்கிரங்களையும் இந்து மதம் கூறுகின்றது.
பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள்.
இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.
- தோழி. சுலேகா
 

குழந்தை பெற பெண்களின் மீது வக்கிரங்களை ஏவும் இந்துமதம்:

முகநூல்:
தோழி சுலேகா
 
குழந்தை பெற பெண்களின் மீது வக்கிரங்களை ஏவும் இந்துமதம்:
- இந்த காவி ஆதிக்கம் வளர்ந்தால் கண்டிப்பாக இதை அமுலுக்குக்கொண்டுவருவார்கள்
இந்து மதம் வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்.
புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"37
- என்று கூற வேண்டும்.
இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''வீரியத்தை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது.
இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான்.
இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள் கவனத்திற்கு
குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேதங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும். இது இன்னும் மறைமுகமாக நடைபெறுகின்றன..
இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது.
இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்வது.
இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.
 

பாரதக் கலாச்சாரம், பண்பாடு என்ற வீண் வாதம் ....

முகநூல்:
தோழி சுலேகா
பாரதக் கலாச்சாரம், பண்பாடு என்று இங்கு வீண் வாதம் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...
கலாச்சாரத்திர்கும் காவித்துவத்ததிற்கும் இங்க என்ன வித்தியாசம் உள்ளது ?
இங்கு நான் சொல்லும் குற்றங்கள் அனைத்தும் அதன் (காவி) பின்னணியில் தான் நிகழ்கிறது. பாலியல் வக்கிரங்களும், சிறுபிள்ளைகளின் மேல் வண்புணர்வுகளும் இங்கு தானே நடக்கிறது. இதுவும் உன் கலாச்சாரம் தானே..
எல்லையில் வாழும் இஸ்லாம் பெண்கள் என்றாலும் சரி, ஊர்க் கொல்லையில் வாழும் தலித் பெண்கள் என்றாலும் சரி.. காலங்காலமாக உங்கள் இராணுவத்தாலும், சாதித் திமிர் காமுகத்தாலும்தானே சீரழிந்துக கொண்டிருக்கிரார்கள். அதுவும் உன் கலாச்சாரப் பின்புலம் தானே..
இதற்கு முன்பு  எந்தப் பெண்ணும் வாய்திறக்கவில்லை, இப்போது கொஞ்சம் வாய்திறந்து வெளியில் சொல்கிறார்கள். அதையும் பொருக்காமல் வண்புணர்வு செய்து மரத்தில் தூக்கிலேற்றும் இந்தச் சமூகத்தில் இதுவும் ஒரு கலாச்சாரம் தானே..
கலாச்சாரம் என்று சொல்லி இங்கு எதை பேசி ஏய்க்கப் பார்க்கிறாய்?
பெற்ற பிள்ளையைக் கூட வண்புணர்வு செய்யும் போக்கு உன் கலாச்சாரப் பின்புலம் இல்லையா ?
எங்கிருந்து வந்தது இந்தக் காமவெறி பிடிச்ச கலாச்சாரம். உன் மதக் கோட்பாடு என்று ஒத்துக்கொள்கிறாயா?
இல்லை விளக்கம் நான் கொடுக்கவா ?
தந்தை மகள் உறவைக் கூட கொச்சைப் படுத்திக் காட்டிய மதம் உன் மதம் அல்லவா ? அதை ஏற்றுக்கொண்ட உங்கள் கலாச்சாரம் இப்படித்தானே வக்கிரம் படிந்து கிடக்கும்...
பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது.
வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும்.
சொந்தக் குழந்தைகளைப் பலியிடப்படுவது என்பது இங்கு சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது.
இந்து மதம் இதைத் தனது புராண இதிகாசங்கள் மூலமாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.
எது உனது கலாச்சாரம்?
அதன் பின்புலம் என்ன ?
இதை முதலில் தெரிந்துகொண்டு என் பதிவில் கருத்துகளை தெரிவி...
- தோழி. சுலேகா
 

ஆசிரமம் வரும் பக்தர்களின் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த காமச்சாமியார் அஸ்ராம் பாபு!

முகநூல்
தோழி சுலேகா
 
ஆசிரமம் வரும் பக்தர்களின் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்து தன்னை கடவுளாக அறிவித்து ‘அருள்’ பாலித்தவர் காமச் சாமியார் ஆஸ்ராம் பாபு! இந்த ‘தவ’த்திற்காக கடந்த ஒரு வருடம் ஜோத்பூர் சிறையில் இருப்பவர்.
தனது சீமந்த புத்திரனையும் அதே – வன்புணர்ச்சி– புண்ணிய செயலுக்காக சிறை மீட்டியிருக்கிறார்.
மாடி வீட்டு மார்வாடி முதல் பா.ஜ.க கட்சி மோடி வரை உள்ள பக்தர்களின் பலம்தான் பலான கழிசடை காரியங்கள் செய்வதற்கான உந்து சக்தி.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கொடுத்து வழக்கு நடைபெற்றாலும், நேரடி சாட்சியங்கள் பலர் கூண்டிலேறி உண்மை சொன்னாலும் சாட்சிகள் சிலரை பரலோகமே அனுப்பி விட்டார்கள்.
இப்பேற்பட்ட மகான் சிறையில் இருக்கும் மாநிலமான ராஜஸ்தானை பா.ஜ.க சீரும் சிறப்புமாக ஆள்கிறது.
இந்நிலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பாட நூலில் நாட்டின் சாமியார்கள் வரிசையில் (சீக்கிய குரு நானக், விவேகானந்தர், அன்னை தெரசா, ராமகிருஷ்ண பரமஹம்சர்) ஆகியோர் வரிசையில் ஆஸ்ராம் பாபுவும் ஜம்மென்ற் அமர்ந்திருக்கிறார்.
சிறுவர்கள் மீதான பாலியல் முறைக்கேடுகளை இந்த நாடே அங்கீகரித்துவிட்டது என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும் ?
இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.
உலகத்திலேயே இது போன்ற நாடு எங்கேயும் இருக்காது...

டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது

முகநூல்
தோழி சுலேகா
டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதை மீடியா பரப்பரப்பாக பேசியது..
தோழி. அருந்ததி ராய் அவர்களின் விமர்சனம் இந்த நாட்டு இறையான்மை மீது...
பார்ப்பன பெண்களுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்க கூடாது..
பிடித்திருக்
 

பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு உடை தான் காரணம் என கூறும் ஆணாதிக்க பொறுக்கிகளே...

முகநூல்: தோழி சுலேகா
 
பெண்களின் மீது நடக்கும் வன்முறைக்கு உடை தான் காரணம் என கூறும் ஆணாதிக்க பொறுக்கிகளே...
உன் வீட்டில் உன்னுடைய தாய் குனிந்து கூட்டும் போது ஆபாசம் என்று அவர்களை வன்புணர்ந்து விடுவாயா?
உன் அக்கா துனி துவைக்கும் போது ஆபாசம் என்று அவர்களை வன்புண்ர்ந்து விடுவாயா?
உன் தங்கை தூங்கும் போது உடை விலகினால் ஆபாசம் என்று வன்புணர்ந்து விடுவாயா?
வயதான கிருஷ்துவ கன்னியாஸ்திரியை வண்புனர்ந்தார்களே அதற்க்கும் உடை தான் காரணமா.?
சின்ன குழந்தைகளை வெறி பிடித்த மிருகம் போல பாலத்காரம் செய்த கொலை செய்கிறார்களே அதற்க்கும் உடை தான் காரணமா?
- குகன் பதிவிலிருந்து...