முகநூல்:
இந்த நாட்டில் பாலியல் குற்ற வழக்கின் விசாரணை யாவும் ஆணாதிக்க சிந்தனையாகவே இருக்கும்.. இங்கஉள்ள புராணங்களிலும் அப்படியே இருக்கும்.. நுட்ப அறிவுள்ளவர் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்
பாலியல் வழக்குகளில் விசாரணை என்பது இங்கு பாதிக்கப்பட்ட பெண்களை தான் குறை சொல்லும், சோதனை செய்யும். கற்புடையவள்தானா என்ற கேள்வியினை முன் வைத்து இரண்டாம் "கற்பழிப்பினை" நிகழ்த்தும்.
இந்தப் பெண் அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு, அந்த நபருடன் சென்றிருக்கிறாரே....?
தோழி சுலேகா

அப்படியானால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு எந்த வகையினதாக இருக்கும்
என்று அற்புத ஆராய்ச்சியினையைத் தொடங்கும் அந்த ஆணாதிக்கச் சிந்தனை. இதை
ஒவ்வொரு பாலியல் குற்ற வழக்குகளிலும் பார்க்கலாம்.
சீதையை ராமன் தீக்குளிக்கச் செய்து "கற்பினை" நிரூபிக்கச் சொன்ன மாதிரி இத்தனை "ராமன்"களுக்கும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தான் ஏற்கெனவே கற்புடையவள் தான் என்று முதற்கண் நிரூபித்தாகவேண்டும்.
இப்படியொரு கற்புக் கேள்வியை ஆணாதிக்க சிந்தனை எழுப்புவதற்குக் காரணம், ஒருவேளை அவள் "ஒழுக்கக் கேடு"டன் இருப்பாரேயானால் அவள் வன்புணர்வு செய்யப்படுவதில் எந்தத்தவறும் இல்லை என்று இந்த சமூகத்தில் படித்தவர்களும், அறிவுஜீவிகளும் கூட நம்பிக்கொண்டிருப்பதை இங்கு காணலாம்.
" ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட அவள் அனுமதி இல்லாமல் அவர் உடல் மீது அத்துமீறும் உரிமை எந்த ஆண்மகனுக்கும் இல்லை"
என்ற எளிய உண்மை விளங்காததால்-அல்லது விளங்கிக் கொள்ள மறுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண் கற்புடையவள்தானா? என்று ஆராய்சி செய்கிறார்கள்..
ஆம் எனில் அது எத்தனை சதவீதத்திலான கற்பு என்ற அபத்த ஆராய்ச்சிகளில் இறங்கச் சொல்கிறது.
இங்கு பார்ப்பன அல்லது பொருளாதர வசதி படைத்த வீட்டு பெண்களுக்கு வேண்டுமென்றால் ஒரு 60% நியாயம் கிடைக்குமே ஒழிய இத்தனை ஆண்டு காலமாக கீழ்நிலையில் உள்ள எந்த பெண்ணிற்கு நியாயம் கிடைத்துள்ளது என்று நீங்கள் சொல்லுங்கள்..
இந்த கேள்விகளை பொருந்துக்கொள்ளவும் முடியாமல் இந்த ஆணாதிக்கத்தை எதிர்க்கவும் முடியாமல் எத்தனை தற்கொலைகள் நடந்திருக்கும்? நடத்தப்பட்டிருக்கும்..?
- தோழி. சுலேகா

No comments:
Post a Comment