Sunday, October 25, 2015

பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

முகநூல்:
தோழி சுலேகா 
பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம்.
யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்தபோது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும்.
இந்தப் பரிமளகத்தி முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்.
இதற்குப் பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக் கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான்.
இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான். இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப் பெற்று எடுத்தாள்.
வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.
பாண்டுவும் இரண்டு பெண்டாட்டிகளாகக் குந்தி, மாதிரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள்.
நம்பித் தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது அம்பு செலுத்தினான்.
அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம்.
இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?
பெண்கள் மீது எவ்வளவு இழிவான சித்தரிப்பு இந்த இந்து மதத்தில்!

No comments: