Sunday, October 25, 2015

ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?
ஆணே ஒரு அடிமை ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி விடுதலை தர முடியும்?
ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் விடுதலை உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!
போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன் தந்தையாய், கணவனாய், தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!
இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம் இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே...
போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம் பொம்பளை வரமாட்டாங்க என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!
உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!..

No comments: