Sunday, October 25, 2015

பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது ....

முகநூல்:
தோழி சுலேகா
 காலம் காலமாய் தொடர்ந்து வரும் பாலியல் வன்புணர்வுக்கு அடிப்படைக்காரணமாய் இருப்பது பெண்ணுடல் மீதான அவளின் உரிமையை அவளுக்கு மீட்டுக் கொடுக்க மறுக்கும் ஆணாதிக்கச் சிந்தனையே..
இந்த ஆதிக்க சிந்தனை எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..
1. ஆடை எப்படி அணிய வேண்டும் என்ற உபதேசம்,
2. எந்த நேரத்தில் மட்டும் பெண் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
3. எந்தெந்த இடத்துக்கு மட்டும் செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
4. யார் கூட வந்தால் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்ற உபதேசம்,
5. பலாத்காரத்தின் போது அந்த காமுகனை "அண்ணா"- என அழைக்க வேண்டுமென்ற உபதேசம்
இன்னும் எத்தனையெத்தனையோ உபதேசங்களைச் சொல்லி இதனால் மட்டுமே பாலியல் வன்புணர்விலிருந்து பெண் தப்ப முடியும் என்று பயங்கரவாதத்தை சமூகத்தில் பரப்பி தனது ஆதிக்க வெறியை காப்பாற்றிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது
வன்புணர்வு என்பது காமம் அல்ல ரத்தம் வர காயப்படுத்துவது அது வன்முறை மட்டுமே என்று ஆண்கள் அனைவருக்கும் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுங்கள்.
பெண் உடல் மீதான உரிமை பெண்ணிக்கே ஆனது. அவள் அனுமதியில்லாமல் அவள் உடல் மீது அத்துமீறும் உரிமை இவ்வுலகில் எந்த ஆண்களுக்கும் இல்லை என்ற புரிதலைச் சொல்லிக் கொடுங்கள்.
பெண்களுக்கு உடை அணிய சொல்லிக்கொடுக்கும் நீங்கள் ஆண்களுக்கு ஏன் இதை சொல்ல தர தவறுகிரீகள் ?
எத்தனை நாள் கலாசாரம், பண்பாடு என்று பெண்களை அடிமைப்படுத்துவீர்கள்..?
- தோழி. சுலேகா
 

No comments: