Sunday, October 25, 2015

வரலாறு படைத்த பெண்குலத்தை வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

 முகநூல்:
தோழி சுலேகா ·
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?
இந்துமதம் என்பதைவிட – இத கெட்ட வார்த்தையில் கூறினால் கூட மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.
’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.
’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!
கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..
பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.
’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’

No comments: