எல்லா
மதங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை
சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குள்
சாதி,வர்க்க, பாலின பேதங்களை உருவாக்கிக் கொள்வதாகவும் கூசாமல் புளுகும்
முட்டாள் மதவாதிகளை அம்பலப்படுத்தி இருக்கின்றது சபரிமலை ஐயப்பன் கோவிலில்
பெண்களை விடமறுக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு மற்றும் கேரள அரசின்
நடவடிக்கைகள்.

இந்துமதம் என்று
அழைக்கப்படும் பிராமண மதம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து
மக்களுக்கும் எதிரான மதம் என்பது இதன் மூலம் நிருபணமாகி இருக்கின்றது.
இதில் அரசின் பாத்திரம் என்பது மக்களின் முட்டாள் தனங்களைச்
சட்டரீதியாகவும், சாஸ்திரங்களின் ரீதியாகவும் பாதுகாத்துத் தன்னை எப்போதும்
தக்கவைத்துக் கொள்வதாகும். பி.ஜே.பியைப்பார்த்து மதவாதக்கட்சி என்று
சொல்லும் காங்கிரசின் உண்மையான யோக்கியதையை நீங்கள் இந்தப் பிரச்சினையில்
இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தப்பிரச்சினையில் கேரள கம்யூனிஸ்டு கட்சி
மட்டும் விதிவிலக்கு அல்ல. கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்யும் காங்கிரசு
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் சேர்ந்தே மகரஜோதி மோசடியில்
ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கலாம்.
தங்களை
பதவியில் தக்கவைத்துக் கொள்வதற்காக எந்தமாதிரியான கீழ்த்தரமான
செயல்களிலும் இந்தக்கட்சிகள் ஈடுபடும். ஆனாலும் தங்களை எப்போதும்
முற்போக்குவாதிகள் போல காட்டிக்கொள்ளும். பி.ஜே.பியின் பார்ப்பன பாசிச
இந்துமதவெறிக்கு எந்தவகையிலும் குறைவில்லாதது காங்கிரசின் மதவெறியும்,
மதவெறியர்களை நக்கிப்பிழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இழிநிலையும். பல
நூற்றாண்டுகளாக சாஸ்திரங்களின் பெயரால் இந்தியப் பெண்கள் மீது வன்முறையைக்
கட்டவிழ்த்துவிடும் இந்திய ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளாகவே அனைத்து
அரசியல் கட்சிகளும் உள்ளன. பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாக
கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசினாலும் அதன் முதன்மையான நோக்கம் தேர்தலில்
வெற்றிபெருவதே ஆகும். அதற்காக பெண்களின் உரிமைகளை அல்ல வேறு எதை வேண்டும்
என்றாலும் அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள்.
பெண்களின் மாதவிடாய் என்றால் எப்போதுமே இந்துமத கடவுள்களுக்கு
அருவருப்பாகத்தான் தெரிகின்றது. அதிலும் குறிப்பாக ஹோமோ செக்சில் பிறந்த
ஐயப்பனுக்கு பெண்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 10 வயதிற்கு மேற்பட்ட 50
வயதுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளே போனால் ஐயப்பன் தீட்டாகி செத்துவிடுவான்.
இந்துமத ஆண்கடவுள்களின் யோக்கியதைக்கு இந்த ஐயப்பன் பிறப்பு கதையே நல்ல
சான்று. எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவிக்கு கொடுத்து ஆணும்
பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கதையளந்தார்களோ அதே சிவன் தான்
விஷ்ணு என்ற இன்னொரு ஆண்கடவுளிடம் ஹோமோ செக்சில் ஈடுபட்டு ஐயப்பனை
உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த லட்சணத்தில் ஏற்கெனவே சிவனுக்கு
இரண்டு மனைவிகள். இப்படி இந்துமத ஆண்கடவுள்கள் பாலியல் வக்கிரம்பிடித்த
பொருக்கிகளாக ஊர்மேய்ந்துகொண்டு இருப்பதை அங்கீகரிக்கும் மதவெறியர்கள்
பெண்கள் கோயிலுக்குள் வருவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
மதங்கள் சகோதரத்துவத்தை வளர்க்கின்றன என்கின்றார்கள். ஆனால் தன்னுடைய
சொந்த அம்மா, அக்கா, தங்கைகளின் மாதவிடாயைக் காரணம் காட்டி அவர்களைக்
கோயிலுக்குள் விடமாட்டேன் என்று சொல்லி கொச்சைப்படுத்தும் இந்துமத
கடவுள்களை வெட்கமே இல்லாமல் ஆண்கள் கும்பிடுகின்றார்கள். இந்துமதம்
அனைத்துசாதி பெண்களையுமே தீண்டத்தகாதவர்களாக கருதுகின்றது. ஆனால் பல
கோடிக்கணக்கான ஆண்கள் தங்களுடைய அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றி இந்துமதப்
புராணங்களும், இதிகாசங்களும் மிகக்கேவலமாக பேசினாலும் அதை எல்லாம்
பொருட்படுத்தாமல் மானங்கெட்டுப்போய் அந்த கடவுளுக்கு மாலைபோட்டுக்கொண்டு
பயபக்தியோடு செல்கின்றார்கள். இதுபோன்ற தன்மானமற்ற உலுத்துப்போன ஆண்கள்
தான் இந்துமத காவிப்படையின் அடியாளாகவும் செயல்படுகின்றனர்.
இதிலே
என்ன கொடுமை என்றால் அங்கே இருப்பது ஐயப்பனே கிடையாது என்று அடித்துச்
சொல்கின்றார் ‘இந்துமதம் எங்கே போகின்றது’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய
அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சரியார். அங்கே இருப்பது அந்த மண்ணின்
மைந்தர்களான பழங்குடி இன மக்கள் வணங்கிய அய்யனார் என்று ஆதாரப்பூர்வமாக
சொல்கின்றார். அந்த மக்கள் தாங்கள் வேட்டையாடி வந்த மிருகங்களைப் படையலாக
வைத்து தங்கள் தெய்வமான அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். பின்னாளின்
ஆந்திராவில் இருந்து அந்தப்பகுதிக்குப் பஞ்சம் பிழைக்கவந்த பார்ப்பன
கூட்டம் அந்தக்கோயிலை ஆக்கிரமித்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி
அந்தக்கோயிலை கையகப்படுத்தி இருக்கின்றது. பின்பு தனது வழக்கமான தொழிலான
புரட்டு தொழில்மூலம் அய்யனாரை ஐயப்பன் ஆக்கி தங்கள்
வசப்படுத்திக்கொண்டார்கள். பின்னர் அந்த மக்கள் தங்களின் வனத்தில்
தீப்பந்தம் ஏந்திக் கொண்டாடும் திருவிழாவையும் தங்கள் வசப்படுத்திக்கொண்ட
பார்ப்பன பொய்யர்கள் அந்தமக்களை எளிய வழிபாட்டு முறையை மாற்றி தாங்கள்
கொள்ளையடிக்கும் ஆடம்பர வழிபாட்டு முறையாக மாற்றினார்கள். (இந்துமதம் எங்கே
போகின்றது நூல்பக்கம் 286-296 ).
இப்படி
மக்களின் முட்டாள் தனத்தைப் பயன்படுத்தி அதை தனக்கான வருமானமாகவும்,
சமூகத்தில் தனக்கான தனி அங்கீகாரமாகவும் மாற்றிவைத்திருக்கும் பார்ப்பன
கூட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனும் போராடவேண்டிய
உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் அதே பார்ப்பன ரவுடி
கூட்டம்தான் மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனி பகவான்
கோவிலுக்குள் பெண்கள் செல்லவும் தடைவிதித்து இருக்கின்றது. இதற்கு எதிராக
பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இன்னும்
எத்தனை நூற்றாண்டு ஆனாலும் வழிபாட்டு உரிமையும், சமூக அங்கீகாரமும்
தங்களைப்பொருத்தே இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு அலையும் இந்த பார்ப்பன
கூட்டம் தன்னையே எப்போதுமே இந்துமதத்தின் தலைமையாக கருதிக்கொள்கின்றது.
இந்தப் பார்ப்பன ஓநாய்களை யார் இந்துமத்த்தின் தலைவர்களாக
தேர்ந்தெடுத்தார்கள் என்றுதான் இன்றுவரை தெரியவில்லை. இவர்களாகவே
வெட்கம்கெட்டுப்போய் அப்படி சொல்லிக்கொள்கின்றார்கள். அதை வைத்துக்கொண்டு
அனைவரையும் மேலாதிக்கம் செய்கின்றார்கள். பல மானங்கெட்ட மேல்சாதியினரரும்
தங்களுடைய சமூக இருப்புக் கருதி அதை உச்சிமோந்து ஆதரிக்கின்றார்கள்.
பெரும்பாண்மையான
உழைக்கும் மக்களாகிய நம்மை எல்லாம் வேசிமக்கள் என்று சொல்லும் பார்ப்பன
கோயிலுக்குள் நுழைவதற்காக போராடுவதா இல்லை அதை முற்றிலும் புறக்கணித்து
நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதா என்பதே நம்முன்னால் உள்ள
கேள்வி. என்னைக்கேட்டால் புறக்கணிப்பதே சிறந்தது என்று சொல்வேன். நம்மை
மதிக்காத கடவுளும், நம்மை அவமானப்படுத்தும் சாஸ்திரங்களும் அதை
தாங்கிப்பிடிக்கும் மதமும் நம்முடைய மறைவான இடத்தில் இருக்கும் மயிருக்குச்
சமமில்லையா?
- செ.கார்கிhttp://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30248-2016-02-15-07-53-18?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29
1 comment:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment